தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் நடைபெற்ற தேர்வு விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து கொரோனா குறைவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்ற நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு குலுக்கல் முறையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இலவச சேர்க்கைக்கு தேர்வான மாணவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் http://rte.tnschools.gov.in இணையத்தில் வெளியிடப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.