Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிக சுவை மிகுந்த… மாம்பழ மோதகம்…!!

மாம்பழ மோதகம் செய்ய தேவையான பொருட்கள்:

கோவா                          – 1 கப்,
சர்க்கரை                      – ¼ கப்,
மாம்பழ விழுது       – ½ கப்,
ஏலக்காய் பொடி     – சிறிதளவு,
நெய்                             – சிறிதளவு
குங்குமப்பூ                – சிறிதளவு

செய்முறை:

முதலில் மாம்பழத்தை எடுத்து சுத்தம் செய்து மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து,  அதில் ஒரு கப் கோவாவைப் போட்டதும், நன்கு இளகும் வரை 2 நிமிடங்கள் கிளறவும். பின்பு கோவா இளகியதும் கால்கப் சர்க்கரையை  சேர்த்துக் கொள்ளவும்.

அதனைதொடர்ந்து, அதில்  சர்க்கரை கரைந்ததும் கோவாவுடன் நன்கு சேரும் பொழுது மாம்பழ விழுதை அதனுடன் சேர்த்து  கிளறவும். சில   நிமிடம் வரை கிளறுவதால் திரண்டு  கெட்டியாக  வரும்.

இப்போது  அதில் ஏலக்காய் பொடி, குங்குமப்பூவைச் சேர்த்தபின் ஒரு சில நிமிடம்   கிளற விடவதால் மாவின் நிறம் நல்ல பதத்திற்கு வரும் போது, அதைஅடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்திற்கு இந்தக் கலவையை மாற்றவும்  .

பின்பு  வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது, சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளவும். அதற்கு பின்பு நெய் தடவிய மோதக அச்சை எடுத்து அதில் உருட்டி வைத்த உருண்டைகளை எடுத்து அச்சில் வைத்து, மெதுவாக எடுத்தால் ருசியான  மாம்பழ மோதகம்  ரெடி.

Categories

Tech |