அவல் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல் – 1 கப்
ஏலக்காய் பொடி – சிட்டிகை அளவு
முந்திரி – 10
பால் – 3 கப்
சர்க்கரை – 1/2 கப்
பாதாம் – 5
செய்முறை:
முதலில் பாதாமை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் சிவப்பு அவலை எடுத்து, அதில் தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி, 5 நிமிடம் அப்படியே வைக்கவும்
மேலும் அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய்யை ஊற்றி பாதம், முந்திரியை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.
அதனை அடுத்து காய்ச்சிய பாலில் அவல் சேர்க்கவும். பின்னர் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இறுதியில் கொதிக்க வைத்த அவல் நன்கு வெந்தவுடன் இறக்கியவுடன் வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து சிறிது கிளறி பரிமாறினால் சுவையான அவல் பாயாசம் ரெடி.