கும்பம் ராசி அன்பர்களே…! இன்றைய தினத்தில் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கவனமாக செயல்பட்டால் எல்லா காரியங்களிலும் வெற்றி குவியும்.கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடு உண்டாகும். விட்டுக்கொடுத்து சென்றால் மிக நன்மையை அளிக்கும். குடும்பத்தில் ஒரு சிலருடைய நடவடிக்கை பிடிக்காமல் இருக்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். அனுசரித்து சென்றால் மிகுந்த நன்மை கிடைக்கும். நண்பர்களின் உதவிகளும் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் அடைய சிறுசிறு சேமிப்புகளை செய்வீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.இன்றைய தினத்தில் வெண்மையான ஆடையை அணிந்து ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபட்டு வரவும்.