Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

மகம் பொலிவு பெற… தீர்வு இதோ…!!!

முகத்தில் எண்ணெய் வடிதலால் அவதி படுவோர்க்கு சர்க்கரை வள்ளிகிழங்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அதை எப்படி உபயோகிப்பது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

முகம், அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை அனைவருக்குமே இருக்கக்கூடிய ஒன்று. முகத்தில் ஏற்படுகின்ற பருக்கள், கரும்புள்ளிகள், முக வறட்சி ஆகியவற்றை நீக்க, பலவித வேதி பொருட்களை தவிர்த்து வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முகத்தின் ஏற்படும் பிரச்சினைகளை குணப்படுத்தமுடியும். அதுவும் சர்க்கரை வள்ளி கிழங்கை வைத்தே தீர்வு காணலாம். அதை எப்படி செய்வது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

வறட்சியை குறைத்து முகம் பொலிவு பெற:

முகம் காண்பதற்கு வறண்டு இருக்கிறதா? அதனை சரி செய்வதற்கு சிறந்த வழி சர்க்கரை வள்ளிகிழங்கு போதுமானது.

தேவையான பொருட்கள்.

யோகர்ட்                                   – 1 ஸ்பூன்                                                                                                                                                                          ஓட்ஸ்                                        – 1 ஸ்பூன்                                                                                                                                                                          சர்க்கரை வள்ளி கிழங்கு  –  பாதி

செய்முறை :-

முதலில் சர்க்கரை வள்ளி கிழங்கை நன்கு வேக வைத்து  மசித்து கொள்ளவும். அடுத்து அவற்றுடன் ஓட்ஸ், யோகர்ட் இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முக வறட்சி நீங்கி பொலிவு பெரும். இவ்வாறு வாரம் 2 முறை செய்து வந்தால் போதும்.

முகத்தை வெண்மையாக்க:

முகத்தை வெண்மையாக்க, சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து முகத்தில் நேரடியாக பூசவும். அதிலுள்ள ஊட்டச்சத்தானது, முகத்தின் கருமையை நீக்கி வெண்மையாக மாற்றும். அத்துடன் முகத்தில் தேங்கி இருக்கும் அழுக்குகளையும் அகற்றும்.

மகத்தில் எண்ணெய் வடிதலுக்கு நிவாரணம்:

முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டே இருந்தால், அவை பருக்களாக மாற வாய்ப்பிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க சர்க்கரை வள்ளி கிழங்கை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்: 

சர்க்கரை வள்ளி கிழங்கு    – பாதி                                                                                                                                                                                தேன்                                             – 1 ஸ்பூன்

செய்முறை :-

சர்க்கரை வள்ளி கிழங்குடன், 1 ஸ்பூன் தேன் கலந்து நன்கு அரைத்து கொள்ளவும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்தபின் வெது வெதுப்பான நீரில் கழுவவும். சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள அந்தோசைனின் முகத்தின் கருமையை நீக்குவதுடன் எண்ணெய் வடிதலையும் குறைக்கும்.

Categories

Tech |