ட்ரம்பின் மனைவி அவரை விவாகரத்து செய்ய போகும் நிலையில் சுவாரஷ்யமான அவருடைய காதல் கதையின் ஒரு பகுதி.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோற்றுப் போனதையடுத்து அவரைப்பற்றி பிரபலமாக பேசப்படும் ஒரு விஷயம் திருமண வாழ்க்கையில் விவாகரத்து நடக்கப்போகிறது என்பது தான். ட்ரம்பின் மனைவி மெலனியா, தனது கணவரான ட்ரம்பை விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும், அவருடனான தொடர்புகளை துண்டித்து விட்டதாகவும் தொடர்ந்து தகவல்களை கூறி வருகின்றார். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த செய்திகளும் இதுவரை வெளியாகவில்லை. 70 வயது ட்ரம்ப் மற்றும் 50 வயது மெலனியா இருவருக்கும் காதல் உருவான விஷயம் மிகவும் சுவாரஷ்யமானது.
இருவருக்கும் 24 வயது வித்தியாசம் இருந்த நிலையில், ட்ரம்ப் மற்றும் மெலனியா பேஷன் வீக் நிகழ்ச்சியில் முதன் முதலாக சந்தித்துள்ளனர். அப்போது மெலனியா அழகை கண்டு மயங்கிய ட்ரம்ப், அவரிடம் பேசி டேட் செய்த இடம் கழிப்பறை ஆகும்.
இதையடுத்து ட்ரம்ப் 5 வருடங்களாக மெலனியாவை டேட்டிங் செய்து வந்தாராம். இந்நிலையில் 2004ம் வருடம் ஏப்ரல் மாதம் ட்ரம்ப் தனது காதலை வெளிப்படுத்திய போது மெலனாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதன் பின்னர் 2005ம் வருடம் ஜனவரி 22 அன்று இருவரும் புளோரிடா பாம் கடற்கரையில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இருவருக்கும் திருமணமான போது ட்ரம்ப்க்கு 58 வயது, மெலனியாவுக்கு 34 வயது என்பது குறிப்பிடதக்கது. மெலனியாவிற்கு முன்னால் ட்ரம்ப் இவானா, மார்லா என்ற இரு இருவரை விவாகரத்து செய்துள்ளார்.