Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

5 ஆண்டு ஆசைக்காதல்…. காதலி சொன்ன செய்தியால்…. காதலன் செய்த செயல்…!!

வாலிபர் ஒருவர் தன் காதலி நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறியதால் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் வசிப்பவர் சிவா என்பவரின் மகன் சந்தோஷ்(26). இவர் கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் கேரளாவைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணாண சுவேதா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் போனில் பேசி தங்களது காதலை வளர்த்துக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் சுவேதா தன்னுடைய காதலன் சந்தோஷத்திற்கு போன் செய்து தனக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கும் அந்த மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். இதனால் சந்தோஷ் மிகவும் வருத்தமாக இருந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று சந்தோஷ் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் சந்தோஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு அனுமதித்ததில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |