Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தீபாவளி பட்டாசு சத்தம் அல்ல துப்பாக்கி சத்தம்” என் வாழ்க்கையே போச்சு…. மொத்த குடும்பத்தையும் குறி வைத்த பெண்…!!

பெண் ஒருவர் தன் கணவர் உள்பட குடும்பத்தில் உள்ள அனைவரையும் சுட்டு கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை மாவட்ட சவுகார்பேட்டை பகுதியில் உள்ள விநாயகர் மேஸ்திரி தெருவில் வசிக்கும்  தம்பதிகள் தலித் (74) – புஷ்பா (70). இவர்களுக்கு ஷீத்தல் மற்றும் பிங்கி என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் ஷீத்தல் என்பவருக்கு ஜெயமாலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து, பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதனால் ஜெயமாலா தற்போது புனேவில் வசித்து வருகிறார். மேலும் இவர்களுக்கு 13 மற்றும் 17 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜெயமாலா தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியதுடன், இதுதொடர்பாக ஜீவனாம்ச வழக்கும் தொடுத்துள்ளார்.

இதனால் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக ராஜஸ்தான் மற்றும் சென்னையில் உள்ள 5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை குழந்தைகள் பெயரில் எழுதி தருமாறு கேட்டு வந்துள்ளார். இதனால் அவருடைய மாமனார் மொத்த சொத்தையும் எப்படி இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் தர முடியும் என்று வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயமாலா தன்னுடைய 2 சகோதரர்கள், சித்தப்பா மற்றும் மாமா ஆகிய ஐந்து பேருடன் தன்னுடைய கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கிருந்த மாமனாரிடம் எனக்கு ஒரு நோயாளியை நீங்கள் திருமணம் செய்து வைத்ததால் என் வாழ்க்கையே வீணாகி போய் விட்டது. எனவே 5 கோடியாக ஜீவனாம்சம் தர வேண்டும் மற்றும் சொத்தில் எங்களுக்கு பங்கு தரவேண்டும் என்று கோபமாக கூறியுள்ளார். இதையடுத்து வாக்குவாதம் தொடர்ந்ததால் ஜெயமாலா கணவன், மாமா மற்றும் அத்தையை தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளார். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் வெளியில் கேட்டுள்ளது ஆனால் அப்போது தெரு முழுக்க பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்ததால் தீபாவளி பட்டாசு தான் என்று மக்கள் நினைத்துள்ளனர்.

இதையடுத்து இது குறித்து காவல்துறையினருக்கு தெரியவந்ததால் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திட்டமிடப்பட்ட படுகொலை என்றும் இதில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தமிழகத்தை சேர்ந்தது கிடையாது என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை காவல்துறையினர் விரைவில் கைது செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |