கறி தோசை செய்ய தேவையான பொருள்கள் :
தோசை மாவு – சிறிதளவு
கொத்துக்கறி – கால் கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள், மிளகாய்த் தூள் – தலா 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்குங்கள்.
அடுத்து அதனுடன் கொத்துக் கறியைச் சேர்த்து வேக வையுங்கள். பின்பு மல்லித் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவேண்டும் .
அதன் பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிரேவி பதம் வரும்வரை கறியை வேகவிட்டு எடுங்கள். பின்பு தோசைக் கல்லில் மாவை ஊற்றி, வேகவைத்த கறிக்கலவையை தோசையின் மேல் பரப்புங்கள்.
அடுத்தது ஐந்து நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடுங்கள். தோசை மேல் மல்லித்தழை அல்லது வெங்காயத்தைத் தூவுங்கள். நன்றாக வெந்ததும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள். கறிதோசைக்கு கிரேவி, குருமா இவற்றில் ஏதாவதொன்றைத் தொட்டுக் கொள்ளலாம் நன்றாக இருக்கும் .