ஜிகர் தாண்டா செய்ய தேவையான பொருள்கள் :
பால் – ஒரு லிட்டர்
சர்க்கரை – 8 டேபிள் ஸ்பூன்
சைனா கிராஸ் – 4 டேபிள் ஸ்பூன்
ரோஸ் கலர் – 1 டேபிள் ஸ்பூன்
நன்னாரி ஸிரப் – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ்கிரீம் ஸ்கூப் – 1
பால் கோவா – 2 டேபிள் ஸ்பூன்
முதலில் ஒரு லிட்டர் பாலை, சர்க்கரை சேர்த்து அடிகனமான வாணலியில் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் சேர்க்க வேண்டும் .
பின்பு பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் சில மணி நேரங்கள் வைக்க வேண்டும் .
அடுத்தது சைனா கிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் வைய்யுங்கள் . இப்பொழுது 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவேண்டும் .
அதன் பின் குளிர்ந்த பாலை முதலில் நீளமான ஒரு கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஊற்றவும். பின்னர் பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனா கிராஸ் துண்டுகளைப் போடவும்.
அடுத்து ரோஸ் ஸிரப், நன்னாரி ஸிரப் ஊற்றவும். பின் வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று கொடுக்கவும்.