Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய் ஊறுகாய்…..செய்து பார்க்கலாம்…!!!

வெள்ளரிக்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள் :

சோயா ஸாஸ்            – 4 டேபிள் ஸ்பூன்
வினிகர்                           – 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை                         – 1டேபிள் ஸ்பூன்
வெள்ளரிக்காய்           – 3
உப்பு                                   – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முதலில் வெள்ளரிகாயை கழுவி சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின் வெள்ளரி துண்டுகளின் மேல் உப்பை தூவி முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

அடுத்து சோயா சாஸ், வினிகர், சர்க்கரை இவைகளை ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ரெடியாக வைக்கவும்.

பின்பு முப்பது நிமிடம் கழித்து வெள்ளரி துண்டுகளை உப்பு போக கழுவி விடவும். அடுத்தது  கழுவிய வெள்ளரி துண்டுகளை ரெடியாக வைத்திருக்கும் கரைசலில் சேர்க்கவும். இதனை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பின் எடுத்து உபயோகிக்கலாம்.

Categories

Tech |