தக்காளி வடகம் செய்ய தேவையான பொருள்கள் :
தக்காளி – 5,
ஜவ்வரிசி – ஒரு கப்,
இஞ்சிச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சை பழம் – ஒன்று,
உப்பு – தேவைக்கேற்ப
முதலில் தக்காளியை மிக்ஸியில் கூழாக அரைத்துக் கொள்ளவும். அதற்கு முன் ஜவ்வரிசியை 7 மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்து அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஜவ்வரிசியை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தக்காளிக் கூழ், இஞ்சிச் சாறு, உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளறவும்.
பிறகு அடுப்பை அணைத்து இறக்கி வைத்து, எலுமிச்சை பழத்தைப் பிழிந்து கலக்கவும். பின்பு கலவையை ஸ்பூனால் சிறிது சிறிதாக எடுத்து, பிளாஸ்டிக் ஷீட்அல்லது சுத்தமான துணியில் ஊற்றிப் பரப்பி 4 நாட்கள் காயவிடவும்.
கலர்ஃபுல்லான இந்த வடாமை தேவைப்படும்போது சூடான எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.