Categories
உலக செய்திகள்

தெருவில் பயங்கர முதலைகள்…. வெளியே வராத மக்கள்…. வெளியான திகில் நிறைந்த வீடியோ…!!

மழை வெள்ளத்தில் முதலைகள் சுற்றி திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு மெக்சிகோ நாட்டிலுள்ள தபாஸ்கோ மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அங்குள்ள ஆறுகள் நிரம்பி வழிந்து வருகின்றன. இந்த வெள்ளத்தால் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 175 ஆயிரம் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தெருக்களில் நுழைந்த வெள்ளத்தில் சுற்றி திரிந்த முதலைகளால் மக்கள் பயத்தில் உள்ளனர். தெருக்களில் உள்ள இந்த முதலைகள் வீடுகளுக்குள் ஏறி விடும் என்ற பயத்தால் மக்கள் வீடுகளை பூட்டி வீட்டுக்குள்ளேயே தங்கியுள்ளனர்.

மேலும்  இந்த முதலைகள் 3 மீட்டர் நீளம் வரை இருப்பதாகவும், வெள்ளம் பாதிக்கப்படாத இடங்களில் கூட முதலைகள் நடமாட்டம் காணப்படுகிறது. மேலும் இதுவரை ஏழுக்கும் அதிகமான முதலைகள் தங்கள் கண்ணில் தென்பட்டதாக அப்பகுதியிலுள்ள நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த திகில் நிறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |