Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மத்திய அமைச்சருக்கு உடல்நலக்குறைவு” பாஜகவினர் அதிர்ச்சி…!!

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்  நிதின் கட்காரிக்கு திடீரென உடல்நலக்குறைவால் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இமாசலபிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள்  நிறைந்த கின்னனூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய தரை வழிபோக்குவரத்து அமைச்சர்  நிதின் கட்காரி நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 61 வயதான இவருக்கு நேற்றைய தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சிம்லா மாவட்டம் சார்பரா என்ற இடத்திலுள்ள ஹாலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் இது  தகவல்  இந்திரா காந்தி  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து விரைந்து வந்த அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அடங்கிய இருந்து மருத்துவக்குழுவினர் நிதின் கட்காரிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். மேலும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கினார். அதன் பின்னர் அவரது உடல் நிலை நன்றாக சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |