செய்யாற்றுப்படுகையில் ஜீவசமாதிகளை கூட விட்டு வைக்காமல் மணல் கொள்ளையர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கரியமங்கலம் எனும் கிராமம் செய்யாற்று பகுதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகின்றது . அப்பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் 9 ஜீவசமாதிகள் இருக்கிறது. இதை கிராம மக்கள் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்யாற்றங்கரையில் தினமும் பகல் நேரத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் கொள்ளை செய்து பதுக்கி வைத்து விட்டு இரவு சமயங்களில்,டிராக்டர்கள் மூலம் மர்மநபர்கள் கடத்திச்செல்கின்றனர்.