Categories
உலக செய்திகள்

மாட்டு இறைச்சியில் பரவும் கொரோனா…. கண்டுபிடித்த சீனா…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!

மாட்டு இறைச்சியில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் எல்லா பகுதிகளிலும் பரவியுள்ளது. இதனை அழிக்க படாதபாடு படவேண்டியிருக்கிறது. இதனால் சீனா மீது பல உலக நாடுகளுக்கு மிகுந்த ஆத்திரம் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரேசில், நியூஸிலாந்து மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளிலிருந்து சீனாவிற்கு மாட்டு இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த பதப்படுத்தப்பட்ட மாட்டின்  இறைச்சியில் கொரோனா வைரஸ் இருப்பதாக சீனா ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் சீன அதிகாரிகள் லாங் நகரில் இறால் கறியிலும், வுகான் நகரில் மாட்டு இறைச்சியிலும், லெங்ஹுவு நகரில் பன்றி இறைச்சியிலும் கொரோனா வைரஸ் இருப்பதை  கண்டறிந்துள்ளனர். எனவே இந்த விவகாரம் உலக நடுகல் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகமாக மாட்டிறைச்சி விற்கும் நாடுகளாக பிரேசில் மற்றும் அர்ஜென்டினா இருக்கின்றது. அதை வாங்கும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் இருக்கிறது. மேலும் இவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பெயர்களை வெளிப்படையாக தெரியப்படுத்தவில்லை. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் வைரஸ் பாதிப்பு என்பது மிகக் குறைவு என்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆனாலும் சீனா கூறும் இந்தக் குற்றச்சாட்டு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இதனால்  உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |