Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சுவையான க்ரில்டு மீன்… செய்வது எப்படி…!!!

க்ரில்டு மீன் செய்ய தேவையான பொருட்கள்:

மீன்                          – 500 கிராம்
மிளகு                     – 2 தேக்கரண்டி
மல்லித் தூள்      – அரை தேக்கரண்டி
உப்பு                        – தேவையான அளவு
மஞ்சள் தூள்       – அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – அரை தேக்கரண்டி
எலுமிச்சை          – ஒன்று

 செய்முறை :  

முதலில் மீனை சுத்தம் செய்து மேலே கத்தியால் கீறி வைக்கவும். மிளகை பொடி செய்து எடுத்துக் கொண்டு, மற்ற தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும். அதை மீனின் மேல் தடவி  4 மணி நேரம் மூடி பாத்திரத்தில் ஃபிரிஜ்ஜில் வைக்கவும்

ப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து சிறிது நேரம் கழித்து மைக்ரோவேவில் க்ரில்லில் வைத்து 10 நிமிடம் இடையில் ஒரு முறை திருப்பி விட்டு க்ரில் செய்து எடுக்கவும். சுவையான மைக்ரோவேவ் க்ரில்டு மீன் தயார்.

Categories

Tech |