Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே உஷாரா இருங்க…! ”அடுத்த 2நாட்களுக்கு இருக்கு”… அலார்ட் கொடுத்த ஆய்வு மையம்… !!

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் லேசான மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும். வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் ,காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Categories

Tech |