பட்டை மிளகு டீ செய்ய தேவையான பொருள்கள் :
தண்ணீர் – 250 மில்லி
பட்டை – 1 துண்டு
மிளகு – 10
மஞ்சள் – சிறிதளவு
இஞ்சி – 1 துண்டு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்சி ஜாரில் மிளகை பொடியை இடித்து, நன்கு அரைத்ததும் இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்கவும். மேலும் அதனுடன் இடித்த மிளகு, பட்டை, மஞ்சள் தூளை கொதிக்கின்ற தண்ணீரில் போடுவும்.
மேலும் மஞ்சளை தண்ணீரில் போட்ட பிறகு, நறுக்கிய சிறு துண்டு இஞ்சி எடுத்து அதில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி பறிமாறினால் சுவையான பட்டை,மிளகு டீ ரெடி.