சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கப்போவதாக வந்த தகவலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அண்டை நாடுகளிலும் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படலாம் என்ற அச்சம் தொடர்ந்து நிலவி வருகிறது இதனையடுத்து தமிழகத்தின் முக்கியமான பகுதிகளில் குறிப்பாக சென்னை மதுரை விமான நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள் மேலும் இலங்கையில் இருந்து வரக்கூடிய பயணிகள் அதி தீவிர சோதனைக்கு பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் விமான நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார் அதன்பின் விமான நிலையத்தில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை அதன்பின் அந்த தகவல் புரளி என்று தெரிந்துகொண்ட பட்சத்திலும் பாதுகாப்பை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் மேலும் விமான நிலைய காவல் துறையினரிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.