ரிஷபம் ராசி அன்பர்களே…! மனதில் உதித்த திட்டம் செயல் வடிவத்தை பெறும்.
வெற்றியை நோக்கி நடை போடுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அளவில் லாபம் கிடைக்கும். கூடுதல் பணம் வந்து சேரும். வருமானத்தை சேமிக்கக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். உறவினர் வகையில் சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும்.சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். சமூகத்தின் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக் கூடிய எண்ணம் மேலோங்கும். உத்யோகத்தில் மந்தமான போக்கு அவ்வப்போது இருக்கும். காலத்திற்கு ஏற்றார்போல் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள்.
மாணவக் கண்மணிகள் சிரமமெடுத்து பாடங்களை படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அல்ல தானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.