மகரம் ராசி அன்பர்களே…! உங்களின் எண்ணம் செயலாக இருக்கும்.
அறிவுத் திறமையால் பணி நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவை இல்லாத விசயத்திற்கு குழப்பமடைய வேண்டாம். திடமான மனதுடன் எதையும் அணுகுங்கள். மனதில் இனம் புரியாத எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். கவலை இருக்கும் தூக்கமில்லாமல் இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து பேசுங்கள். தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். பணம் வரவு இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.
மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்னதானமாக கொடுத்து வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.