Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கச்சாயம்…. செய்து பாருங்க நல்ல ருசி…!!!

கச்சாயம் செய்ய தேவையான பொருள்கள் :

பச்சரிசி                  – ஒரு கப்
பாகு வெல்லம்   – அரை கப்
நெய்                         – ஒரு கப்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

செய்முறை : 

முதலில் பச்சரிசியைத் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து நிழலில் உலர்த்தி, நைஸாக பொடித்து, சிறிய கண்ணுள்ள ஜல்லடையில் 2, 3 முறை சலிக்கவும்.

அடுத்து வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு வைக்கவும். பாகு உருண்டை பதம் வந்தபின் அதில் மாவை கொட்டிக் கிளறவும்.

அதன் பின் கிளறிய மாவை எடுத்துப் பார்க்கும்போது மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது, லூஸாகவும் இருக்கக் கூடாது. மாவின் மீது நெய் தடவி வைக்கவும்.

பின்பு அடுத்த நாள் வாழை இலையில் நெய் தடவி, மாவை உருட்டி வைத்து, லேசாக தட்டவும். கடாயில் நெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்த கச்சாயத்தை போட்டு, உடனே திருப்பிப் போட்டு எடுக்கவும்.

Categories

Tech |