Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிக்கன் ஸ்பிரிங் ரோல்… ஈசியா செய்வது எப்படி…!!!

சிக்கன் ஸ்பிரிங் ரோல் செய்ய தேவையான பொருட்கள்:

கேப்ஸிகம்                     – இரண்டு மேசைக்கரண்டி
முட்டை கோஸ்          – அரை கப்
ஒயிட் பெப்பர்               – ஒரு தேக்கரண்டி
சிக்கன்                             – 100 கிராம்
உப்பு                                  – தேவையான அளவு
ஸ்பிங் ஆனியன்       – ஒரு ஸ்டிக் (இரண்டு மேசைக்கரண்டி)
பூண்டு                            – இரண்டு பல்
கேரட்                              – கால் கப்
பட்டர்                             – ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ்             – ஒரு டிராப்
சர்க்கரை                      – அரை தேக்கரண்டி

செய்முறை: 

முதலில் சிக்கன், காய்கறி, பூண்டு அனைத்தையும் துருவி கொள்ளவும் அல்லது ப்ளெண்டரில் தனித்தனியாக போட்டு வைக்கவும்.

பிறகு ஒரு பானில் பட்டரை உருக்கி, அதில் சர்க்கரை, பூண்டை போட்டு வதக்கி அதனுடன், சிக்கன் துருவல் போட்டு வதக்க வேண்டும். வெந்தப்பின் காய்கறிகள், சோயா சாஸ், உப்பு, ஒயிட் பெப்பர் போட்டு வதக்கவேண்டும் . வதக்கிய கலவையை ஆறவிடவும்.

அடுத்து ரோல் தயாரிக்க –மைதா மாவு , உப்பு சேர்த்து தளர பிசையவேண்டும் . பின் அதை சப்பாத்தி போல் மிக மெல்லியதாக இடவும். பிறகு அதை சதுர வடிவமாக வெட்டவேண்டும்.

பின்பு அதை லேசாக தவாவில் சூடுப்படுத்தி ஆறவிடவும்.இப்போது ஷீட் தயாராகிவிட்டது . அதில் கலவையை வைத்து இரண்டு புறமும் மடித்து பிறகு ரோல் செய்யவேண்டும் .

பின் மைதா பேஸ்ட் சிறிது குழைத்து கடைசியில் ஒட்டவேண்டும் இப்பொழுது இதை எண்ணெயில் பொரித்தெடுகவும்.

Categories

Tech |