Categories
தேசிய செய்திகள்

அனுஷ்காவின் நாய் விராட்….. கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் பிரமுகர்…. எழுந்த சர்ச்சை…!!

விராட் கோலியை நாய் என  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி அனைவருக்கும் வாழ்த்துக்கூறி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பட்டாசு வெடிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக தீபம் ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடும் படி கேட்டுக் கொண்டார். அவரது இந்த பதிவு நெட்டிசன்களிடையே பல கேள்விகளை எழுப்பியது. ஐபிஎல் தொடரில் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடும் போது நாங்கள் மட்டும் எதற்காக பட்டாசு வெடிக்கக் கூடாது என தங்கள் கருத்துக்களை பலரும் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதித் ராஜ் விராட் கோலியை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் அனுஷ்கா தனது நாய் கோலியை  கவனிக்க வேண்டியதில்லை. நாயை விட எவரும் உண்மையானவர்கள் அல்ல  என குறிப்பிட்டிருந்தார். விராட் கோலியை நாயென விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |