இஞ்சி டீ செய்ய தேவையான பொருள்கள் :
பால் – 1/2 லிட்டர்
இஞ்சி – 2 இஞ்ச் அளவு
சீனி – தேவைக்கு
ஏலம் – 2
தேயிலை தூள் -3 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் பாலை காய்ச்சவும். தீயை குறைத்து வைத்து, அதில் தட்டிய இஞ்சி, ஏலம் போட்டு வேகவிடவும். 5 நிமிடம் கழித்து டீ தூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கி ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து டீயை ஊற்றி பின்பு சீனி சேர்த்து பரிமாறவும்.