தேசிய பத்திரிகை தினத்தையொட்டி ஊடக ஊழியர்கள் அனைவருக்கும் குடியரசு துணைத் தலைவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தேசிய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்த நாள் தேசிய பத்திரிக்கையாளர் தினமாக 1996 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. நம் ஜனநாயகத்தை கட்டிக் காப்பதில் முக்கிய பங்காற்றி கொண்டிருக்கும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை கௌரவிக்க கூடிய வகையில் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் தேசிய பத்திரிக்கையாளர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அதனால் அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தேசிய பத்திரிக்கை தினமான இன்று அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும், மக்களுக்கு தகவல் அடிப்பதிலும், அதிகாரம் அளிப்பதிலும் ஊடகங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. தொற்று நோய்களின் போது நாட்டு மக்களுக்கு தொடர்ந்து தகவல் பறித்துக்கொண்டிருக்கும் ஊடக ஊழியர்களை நான் பாராட்டுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.