சிறுவனின் வயிற்று பகுதியில் இருந்த 25 காந்தத் துண்டுகளை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியானா நாட்டில் வசிக்கும் 4 வயது சிறுவன் ஒருவனுக்கு திடீரென தொண்டையில் வலியுடன் மூச்சு திணறலும் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் எதையாவது விழுங்கி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் சிறுவனுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவனுடைய தொண்டை பகுதியில் இரண்டு காந்தத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவனுடைய வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்க்கும்போது அங்கு 25 காந்த துண்டுகள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து காந்தத் துண்டுகளை நீக்கியுள்ளனர். இந்த காந்தத் துண்டுகள் சிறுவன் விளையாடுவதற்காக அவனுடைய பெற்றோர் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் இந்த சிறு பொருள் இப்படி குழந்தையின் உயிருக்கே வினையாக மாறும் என்பதை அவர்கள் நினைக்கவில்லை.