Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல்… அமைச்சர் விஜயபாஸ்கர்…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன் மூலமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மொத்தம் 3,650 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளனர். தமிழக அரசின் உத்தரவை ஏற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முதன்முறையாக 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |