மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை 6 உயர்ந்ததுள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் மானிய கியாஸ் விலையும், மானியம் அல்லாத கியாஸ் விலையும் உயர்த்துள்ளது.ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மேல் வாங்கி பயன்படுத்துவர்களுக்கு மானியம் அல்லாத விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகின்றது . இதனுடைய விலை சிலிண்டருக்கு ரூபாய் 6 உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை இதனுடைய விலை அதாவது சிலிண்டருக்கு ரூபாய் 722_இல் இருந்து ரூபாய் 728_ஆக அதிகரித்துள்ளது.மானியத்துடன் வழங்க கூடிய கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் 28 காசு உயர்த்தப்பட்டு விலை ரூபாய் 484.02 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையளர்கள் சற்று கவலை அடைந்துள்ளனர்.