தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எந்த ஒரு காரணத்துக்காகவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் வேறு சில பணிகளுக்காக பராமரிப்பு பணிகளுக்காக இடை காலமாக ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதற்குக் கூட அவர்களுக்கு எந்தவிதமான முகாந்திரமும் கிடையாது எனவே ஆலை மூடப்பட்டது மூடப்பட்டது தான், இனி ஒருபோதும் அது திறக்கப்படாது என திட்டவட்டமாக கூறி இருக்கின்றார்கள்.