தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எந்த ஒரு காரணத்துக்காகவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் வேறு சில பணிகளுக்காக பராமரிப்பு பணிகளுக்காக இடை காலமாக ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதற்குக் கூட அவர்களுக்கு எந்தவிதமான முகாந்திரமும் கிடையாது எனவே ஆலை மூடப்பட்டது மூடப்பட்டது தான், இனி ஒருபோதும் அது திறக்கப்படாது என திட்டவட்டமாக கூறி இருக்கின்றார்கள்.
ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வழக்கறிஞ ஆஜராகி நிர்வாகம் திறக்க வேண்டும் என்றால் என்ன மாதிரியான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் ? அல்லது இந்த ஆலையில் என்ன மாதிரியான விஷயங்களில் சரியான கடைபிடிக்கப்பிடித்தால் இயக்கப்பட்டலாம் ? எது போன்ற விஷயங்களை நாங்கள் அறிக்கையாக தாக்கல் செய்தால் எங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று கூறியிருந்தார்கள்.
இதனை ஏற்றுக்கொண்டு வழக்கை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே அடுத்த விசாரணை வரும் வரையிலும் இந்த ஆலை திறக்கப்படாது. இந்த வழக்கு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து தமிழக அரசு ஆலையை திறக்க கூடாது என உறுதியாக இருக்கின்றார்கள். எனவே இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும் வரை இடை காலமாக கூட இந்த ஆலை திறக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லாத ஒரு சூழல் தான் இருக்கிறது.