Categories
மாநில செய்திகள்

ஜாக்கிரதை..!! இதையெல்லாம் பண்ணாதீங்க…. தமிழாக மக்களுக்கு எச்சரிக்கை…!!

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தமிழ்நாடு பேரிடர் குறைப்பு முகமை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை கடந்த திங்களன்று தமிழக மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தொடர்ந்து தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் ஆற்றை கடந்து செல்லவ ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாழடைந்த கட்டடங்களில் தங்குவதும் அதனருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும். பழைய வீடுகளில் தங்கி இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு போகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்படும். எனவே மரத்தின் அடியில் நிற்க கூடாது, குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது, திறந்தவெளியில் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என  தெரிவித்துள்ளது.

Categories

Tech |