சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 100 அடி ஆழமான கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், எம். செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் நேற்று மாலை தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற நிலையில், ஒரு ஆடு மட்டும் , அங்கிருந்த 100 அடி ஆழமான கிணற்றில் தவறி விழுந்தது.இதையடுத்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், இரவு நேரம் என்றும் பாராமல் , கடும் முயற்சி செய்து ஆட்டை உயிருடன் மீட்டனர்.