Categories
உலக செய்திகள்

தங்கத்திற்கு கிராக்கியான நேரத்தில்….. ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகையை…. குப்பையில் எறிந்த பெண்…!!

தேவையில்லாத பொருட்களை குப்பையில் வீசியபோது ரூ.3லட்சம் மதிப்பிலான நகைகளையும் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிம்பிள் சௌதகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரேகா. இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தேவையில்லாத பழைய பொருட்களை எல்லாம் எடுத்து வெளியில் கொண்டு போடும்போது வெகுநாட்களாக கிடந்த ஒரு பழைய தோல் பையையும் தூக்கி குப்பையில் வீசியுள்ளார். இதையடுத்து அந்த பேக்கை வீசிய 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் தான் பல காலமாக பாதுகாப்பாக வைத்திருந்த தன்னுடைய தாலி, கொலுசு உள்பட 3 லட்சம் மதிப்புடைய நகைகளை அந்த பையில் வைத்திருந்தது நினைவுக்கு வந்துள்ளது.

உடனே ரேகா தனக்கு தெரிந்த உள்ளூர் சமூக சேவகரான சஞ்சய் குட்டா என்பவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். அவர் உடனே பிசிஎம்சி சுகாதார துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் ரேகாவின் குடும்பத்தினர் குப்பை கிடங்கிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளனர்.

இதையடுத்து குப்பைக்கிடங்கில் பணிபுரியும் ஊழியர்கள் குப்பையை ஏற்றி சென்ற லாரியை சோதனையிட சென்றபோது அனைத்து குப்பைகளும் கிடங்கிற்கு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டெப்போவின் தரவு ஆய்வாளர், சுகாதாரத்துறை இன்ஸ்பெக்டர் கொடுத்த தகவலை வைத்து எந்த கிடங்கில் பேக் இருக்கும் என்பதை குத்துமதிப்பாக கூறியுள்ளார். அவர் கூறியபடி அங்கு சென்று தேடிப் பார்த்தபோது ஹேண்ட் பேக் கிடைத்துள்ளது. வீடுகளை சுத்தம் செய்யும் போது எது தேவையானது? தேவையற்றது எது? என்பதை முடிவு செய்து கொண்ட பிறகு தான் சுத்தம் செய்ய வேண்டும். தேவையில்லை என்றால் அதை ஒரு முறை சோதனை செய்து பார்த்து விட்டு அதன் பிறகு குப்பையில் போடுவது நல்லது.

Categories

Tech |