அகத்திக்கீரை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
அகத்திக்கீரை – 1 கட்டு
தேங்காய் துருவல் – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
வரமிளகாய் – 3
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் துருவல் – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
வரமிளகாய் – 3
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் அகத்திக்கீரையை எடுத்து நன்கு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மேலும் தேங்காயை துருவி எடுத்து கொள்ளவும்.
அதனை அடுத்து கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்ததும், பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதில் நறுக்கி வைத்திருக்கும் கீரையை போட்டு கிளறியவுடன், அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இறுதியில் வேக வைத்த கீரையானது, முக்கால் பாகம் வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து
நன்கு கிளறி விட்டு வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான அகத்திக்கீரை பொரியல் ரெடி.