அணியில் புறக்கணிக்க பட்டதால் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்க தேசத்து கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் வீரர் சோஜிப். 21 வயதே ஆன மிகுந்த மன உளைச்சலுடன் இருந்து வந்தார். இந்நிலையில் சோஜிப் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் யு19 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்றதோடு இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது தான் என கூறப்படுகின்றது. இளம் வீரராக இருந்தாலும் இவரது முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.