கேரள மாநிலத்தில் வயதான பாட்டி ஒருவர் தனியாக ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார்.
காடுகளின் அழிவு உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆங்காங்கே காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக மிகப்பெரிய பேரிடர் வருங்காலத்தில் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து பல நாடுகள் மரம் வளர்ப்பதை ஊக்குவித்து வருகின்றனர். இந்தியாவிலும், பல பகுதிகளில் தனிநபர்கள், நிறுவனங்கள் பல, மரங்களை வளர்க்க ஊக்குவிக்கும் விதமாக, தனி காடுகளை வளர்த்து நிர்வாகம் செய்து வருகின்றனர். அந்த வகையில்,
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள பகுதியை சேர்ந்த தேவகி என்பவர் இயற்கையின் மேல் உள்ள ஆர்வத்தால் தனியாக ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார். இவருக்கு 1970-களில் தொடங்கிய இந்தப் பழக்கம் இயற்கை முறையிலேயே 200 இன மரங்கள், பல அரிய தாவரங்கள், மருத்துவ தாவரங்கள் ஆகியவற்றை வளர்த்தெடுக்க ஊக்குவித்துள்ளது. மேலும் இவர் வளர்த்தெடுத்துள்ள மரங்களை தற்போது இயற்கை வளத்தை படிக்கும் பலரும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.