தமிழகத்தில் பாஜக கட்சி தலைமையில் வேல் யாத்திரையை தடையை மீறி நடந்த முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் வேல் யாத்திரை குறித்து பாஜக தலைவர்கள் பலரும் அதை நடத்தியே தீருவோம் என பல இடங்களில் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். இந்த வரிசையில்,
வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று வானதி ஸ்ரீனிவாசனும் வேல் யாத்திரைக்கு ஆதரவாக கருத்து கூறிய நிலையில், மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. சாதி, மதங்களால் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட யாத்திரை ஊர்வலங்களை தமிழகம் ஆதரிக்காது. அது கருப்பர் கூட்டம் ஆனாலும் சரி, காவிக் கொடி பிடிப்பவர்களானாலும் சரி என்று அதிமுகவின் அம்மா நாளிதழில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.