நார்த்தங்காய் பச்சடி செய்ய தேவையான பொருள்கள் :
பொடியாக நறுக்கிய நார்த்தங்காய்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
கடுகு – 2 டீஸ்பூன்,
புளி – 1 எலுமிச்சை அளவு,
நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 1/4 கப்.
துருவிய வெல்லம் – 1/4 கப்,
செய்முறை :
முதலில் நார்த்தங்காயுடன் உப்பு, வெல்லம், மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு கொதித்ததும் புளியை கரைத்துச் சேர்க்கவும்.
அதன் பின்பு கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து நார்த்தங்காயுடன் சேர்த்து பரிமாறவும்