Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பாக ரெடியாகும் ‘டாக்டர்’… தீபாவளிக்கு வெளியான போஸ்டர்… அடுத்த ஆண்டு ரிலீஸ்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டது.

தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் வினய் வில்லனாகவும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால் தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்த திரைப்படம் வெளியிடப்படும் என எதிர்பார்த்து வந்த நிலையில் டாக்டர் திரைப்பட ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியான டாக்டர் பட போஸ்டரில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Categories

Tech |