Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான தக்காளி சாதம்… செய்து பாருங்கள்…!!!

தக்காளி சாதம் செய்ய தேவையான பொருள்கள் :

தக்காளி                       – 1/4 கிலோ
பாசுமதி அரிசி           – 2 ஆழாக்கு
இஞ்சி                            – 20 கிராம்
பச்சை மிளகாய்       – 6
பூண்டு                          – 1 முழுப் பூண்டு
மல்லித் தூள்            – 2 தே‌க்கர‌ண்டி
வெங்காயம்              – 200 கிராம்
பட்டை, லவங்கம், – தலா இரண்டு
புதினா                          – 2 கைப்பிடியளவு
பேலீஃப்                        – தலா இரண்டு
உப்பு, எண்ணெய்    – தேவையான அளவு

 செய்முறை : 

முதலில் பச்சை மிளகாயை வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நீண்ட வாக்கில் வெட்டுங்கள். தக்காளியைப் பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள்.

அதன் பின் பாசுமதி அரிசியைக் கழுவி ஊற வையுங்கள். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டுத் தாளியுங்கள்.

அடுத்தது  புதினா, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தனியா தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்குங்கள். இந்த மசாலா கலவையில் பாசுமதி ஆரிசியைப் போட்டு, ஒரு தம்ளர் அரிசிக்கு ஒன்றரை தம்ளர் தண்ணீர் என்ற அளவில் நீர் விட்டு குக்கரை மூடுங்கள். எரியும் அடுப்பின் மீது தோசைக்கல்லை வைத்து அதன் மேல் குக்கரை வையுங்கள்

பின்பு  குக்கரில் வெ‌யிட் போடக் கூடாது. இதுதான் தம் போடும் முறை. 20 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பிலிருந்து இறக்‌கி ப‌ரிமாறு‌ங்க‌ள். இப்போது சுவையான தக்காளி சாதம் தயார்.

Categories

Tech |