இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா ,யோகி பாபு நடிப்பில் தயாரான ‘சலூன் ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலக பிரபல நடிகர் மிர்ச்சி சிவா கலகலப்பு, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, தமிழ் படம் என பல திரைப்படங்களில் அசத்தலாக நடித்தவர். இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் திரைப்படம் சலூன். யோகி பாபு தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர். காமெடி நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு கூட்டணியில் உருவாகியுள்ள சலூன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . போஸ்டரில் முதலாளி சிவா மற்றும் தொழிலாளி யோகிபாபு என்று உள்ளது. மேலும் சிவா – யோகிபாபு இணைந்து இருப்பதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.