மதுரையில் மு.க.அழகிரி வருகின்ற 20 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சட்டசபை தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரையில் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆலோசனை கூட்டத்தில் தனிக்கட்சி தொடக்கம், யாருக்கு ஆதரவு போன்றவை பற்றிய ஆலோசனை செய்யப்பட உள்ளது. பாஜக ரஜினியை பெரிதும் நம்பும் அழகிரி, ரஜினி ஆட்சிக்கு வராவிட்டால் பாஜகவுடன் கைகுலுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.