Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வெஜ் ரவா கிச்சடி… செய்து பாருங்க…!!!

வெஜ் ரவா கிச்சடி செய்ய தேவையான பொருள்கள் :

ரவை                                                        – அரை கிலோ
பட்டாணி                                               – 100 கிராம்
கேரட்                                                      – 100 கிராம்
பீன்ஸ்                                                     – 100 கிராம்
தக்காளி                                                 – இரண்டு
வெங்காயம்                                        – இரண்டு
கொத்துமல்லி, கறிவேப்பிலை – ‌சி‌றிதளவு
பட்டை, லவுங்கம்                            – சிறிதளவு
ஏலக்காய்                                             – சிறிதளவு
நெய்                                                        – 100 கிராம்
முந்திரி                                                 – 50 கிராம்
மஞ்சள் பொடி, கேச‌ரி பொடி      – சிறிதளவு
உப்பு                                                       – சிறிதளவு
இஞ்சி, புண்டு விழுது                    – தேவை‌க்கே‌ற்ப
பச்சை மிளகாய்                               – நான்கு

செய்முறை : 

முதலில் பட்டாணி, பீன்ஸ், கேரட் ஆ‌கியவ‌ற்றை பொடியாக நறு‌க்‌கி வேகவை‌த்து‌க் கொள்ள வேண்டும். வாண‌லி‌யி‌‌ல் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடு‌த்து‌க் கொள்ளவு‌ம். அதே வாண‌லி‌யி‌ல் ‌பிறகு ரவையை வறுத்து எடு‌த்து‌க் கொள்ள வேண்டும்

அடுத்தது வாண‌லி‌யி‌ல் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவுங்கம் போட்டு பிறகு வெங்காயம் போட்டு வத‌‌க்கவு‌ம். ‌பி‌ன்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி, பச்சை மிளகாயையு‌ம் சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம். ‌பி‌ன்பு மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, வேக வைத்த காய்களை சேர்த்து வதக்கவு‌ம்

பின்பு எ‌ல்லா‌ம் ந‌ன்கு வத‌ங்‌கிய ‌பி‌ன்பு தேவையான அளவு தண்‌ணீ‌ர் சேர்த்து கொ‌தி‌க்க ‌விடவு‌ம். த‌ண்‌ணீ‌ர் கொ‌தி‌க்கு‌ம்போதே ச‌ரியான அள‌வி‌ல் உ‌ப்பு போடவு‌ம்.

அதனுட‌ன் த‌ண்‌ணீ‌ர் கொதித்ததும் ரவையை கொ‌ட்டி‌க் ‌கிளறவு‌ம். நன்கு கிளறி ரவை வெந்தவுடன் வறு‌த்த மு‌ந்‌தி‌ரியையு‌ம், கொத்துமல்லியையு‌ம் தூவி பரிமாறவும்

Categories

Tech |