Categories
உலக செய்திகள்

“2 முறை மாஸ்க் அணியவில்லை” ரூ.1,67,945 அபராதம்…. செலுத்திய பயணி…!!

இரண்டு முறை பேருந்தில் மாஸ்க் அணியாமல் சென்ற பயணிக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள கிழக்கு லண்டனில்  பேருந்தில் பயணித்த 49 வயது பயணி ஒருவர் மாஸ்க் அணியாமல்  பயணித்ததற்காக, அபராதமாக 1,710 பவுண்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாஸ் அணியாமல் வந்ததற்கான தகுந்த காரணங்களை அவர் இதுவரை தெரிவிக்கவில்லை. மேலும் இந்த பயணி இரண்டு முறை மாஸ்க் அணியாமல் அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார். இதையடுத்து இவருடன் சேர்ந்த பல பயணிகள் மாஸ்க் அணியாமல் பயணித்ததற்காக நீதிமன்றம் அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான பயணி ஒருவர் இதேபோன்று பேருந்தில் மாஸ்க் இல்லாமல் பயணம் செய்ததற்காக 194 பவுண்டுகள் அபராதம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் மாஸ்க் அணியாமல் கர்ப்பிணி ஒருவர் பேருந்தில் ஏறும் போது பஸ்சில் பயணித்த பயணி ஒருவர் அவருக்கு புதிதாக ஒரு மாஸ்க் ஒன்றை அளித்துள்ளார். இருப்பினும் அவரும் அபராதம் செலுத்த வேண்டிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |