நம் ஒவ்வொருவருக்கும் என்றாவது ஒருநாள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு சிறந்த சிந்தனை கண்டிப்பாக தோன்றும், அது வாழ்க்கைக்கு சரிவராத அதீத கற்பனையாக இருந்தாலும், விடா முயற்சியை செலுத்தினால் கண்டிப்பாக வெற்றியை நோக்கி செல்லலாம். ஆனால் அதை ஒரு சிலர் மட்டுமே கடைப்பிடித்து வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். அதற்கு காரணம், ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்து விட்டு, அதை சிறிது நேரம் கழித்து செய்யலாம் அல்லது சில நாட்களுக்கு பிறகு செய்யலாம் என்ற அலட்சிய மனோபாவம் பெரும்பாலோனோருக்கு வந்துவிடும்.
எண்ணிய காரியத்தை உடனடியாக செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்க்கவேண்டும். நாளை செய்ய வேண்டியதை கூட இன்றே செய்ய முடியுமா என்பதை கணித்து துல்லியமாக செயல்பட்டால், 60 வருடம் கழித்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைத்து வைத்திருக்கக்கூடிய கனவு வாழ்க்கையை வெறும் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்.
அதற்கு முன்பு ஒரு உதாரணமாக மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையை உதாரணமாக எண்ணிக் கொள்ளலாம். பறவை மரத்தில் உள்ள கிளையை நம்பி அமரவில்லை. அதன் சிறகை தான் நம்பி அமர்கிறது என்பதை புரிந்து கொண்டு நாம் அனைவரும் செயல்பட வேண்டும். இந்தப் பதிவு படிக்கின்ற ஏதாவது ஒரு நபரின் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.