ஒடிசாவில் நாளை பானி புயல் கரையை கடக்க இருப்பதால் 43_க்கும் அதிகமான இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் நாளை ஒடிஸா மாநிலத்தின் புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி கரையைக் கடக்கவுள்ளது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இந்த புயல் கரையை கடந்து ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் வழியாக மேற்கு வங்கத்துக்குள் செல்கிறது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் ஒடிஸா மாநில அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் விடுமுறையை ஒடிசா அரசு அறிவித்துள்ளது. மேலும் பானி புயல் காரணமாக, ஒடிஸாவின் 11 கடலோர மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ள நிலையில் பயணிகளின் பாதுகாப்பு கருதி, 43- க்கும் மேற்பட்ட ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போல மேற்கு வங்க மாநிலத்திலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.