Categories
மாநில செய்திகள்

“வெற்றி என்று கொட்டு முரசே” டாஸ்மாக்கின் புதிய சாதனை…. ராமதாஸ் ட்விட்….!!

ஒவ்வொரு தீபாவளி அன்றும் பிரபலங்களின் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி யாருடைய படம்  அதிக வசூல் அடிக்கும்  என்று ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு இருப்பார்கள். ஆனால் அந்த வசூலைவிட, ஒவ்வொரு வருடமும் டாஸ்மாக் அதிக வசூலை ஈட்டி சாதனை படைத்துவிடும்.  அதேபோல, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மது விற்பனை களை கட்டிய நிலையில்,

ராமதாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில், வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே! தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை ரூபாய் 606 கோடி என்ற புதிய சாதனை அளவை எட்டியதை வெற்றி என்று கொட்டு முரசே ! குடிமக்கள் வாழ்க !என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார். 

Categories

Tech |