வாலிபர் ஒருவர் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் மாநிலத்தில் வசிப்பவர் பிரணாய். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் கனடாவுக்கு குடிபெயர்ந்து உள்ளார். அங்கு பிரணாய்க்கு அகிலா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் வருகிற ஆகஸ்டு மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. இந்நிலையில் காதலர்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். பிராணாயின் முரட்டுத்தனமான செயலால் தான் இருவரும் பிரிந்துள்ளனர் என்று சில தெலுங்கானா பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று பிரணாய் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து இது பற்றிய தகவல் அவருடைய குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து பிரணாய் எழுதியிருந்த கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.
அதில், “அகிலா ஹெச்1 விசா வந்த பிறகு என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டாள். அவள் என்னை ஏமாற்றி முன்னாள் காதலருடன் பேசினாள். இதற்கு காரணம் அவளுடைய பெற்றோர்கள் தான், அவர்கள் அகிலாவை துன்புறுத்தியுள்ளனர். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன். மேலும் நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருடைய சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும் என்று அவருடைய குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.